முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு 22 ஆம் தேதி ஹால்டிக்கெட்

புதன்கிழமை, 20 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூன்.- 20 - வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ள பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வுக்கு நேற்று முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு வரும் 22 ஆம் தேதி முதல் ஜூலை 4 ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான தேர்வுக்கூட ஹால் டிக்கெட் நேற்று தொடங்கியது. தொடர்ந்து 21 ஆம் தேதி வரை ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவராக தேர்வு எழுதி தோல்வியடைந்த அல்லது வருகை புரியாமல், தற்போது சிறப்பு துணைத் தேர்வுக்கு பள்ளிகள் மூலமாக விண்ணப்பித்தவர்கள் அவர்கள் படித்த பள்ளிகளிலேயே ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுதி தோல்வியடைந்து தற்போது சிறப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட் வினியோக மையத்தில் ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செங்கல்பட்டு செயிண்ட் கொலம்பஸ் மேல்நிலைப்பள்ளியிலும், காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காஞ்சிபுரம் ஆண்டர்சன் மேல்நிலைப்பள்ளியிலும், பொன்னேரி கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், திருவள்ளூர் கல்வி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருவள்ளூர் டி.ஆர்.பி.சி.சி. இந்து மேல்நிலைப்பள்ளியிலும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னையைச் சேர்ந்தவர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள மதராசா​ஐ​ஆசாம் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்