முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஒபாமாவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. - 17 - இந்தியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் கவலை அளிப்பதாக உள்ளது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் ஆனந்த் ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும், இது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறி உள்ளார். எனவே இந்தியா தனது பொருளாதாரத்தை மேம்படுத்த சில முக்கியமான கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வெளிநாட்டினர் முதலீடு செய்வது மிகவும் சுலபமாக உள்ளது என்றும் இதில் கடினமான நடவடிக்கைகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஆனந்த் ஷர்மா கூறியுள்ளார். இந்திய பொருளாதாரத்தின் உண்மை நிலைக்கும், ஒபாமாவின் கருத்துக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதே போல் ஒபாமாவின் கருத்துக்கு பா.ஜ.க. மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா 2 வது முறையாக போட்டியிடுகிறார். தான் மீண்டும் அதிபராக வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்காளர்களை கவர்வதற்காக இதுபோன்ற கருத்துக்களை உண்மை நிலைக்கு மாறாக ஒபாமா தெரிவித்து வருகிறார் என்று பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த்சின்கா கூறி உள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago