முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப் - அரியானாவில் வெளுத்து வாங்கும் மழை

சனிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2012      இந்தியா
Image Unavailable

சண்டிகார்,ஆக.11 - பஞ்சாப், அரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகாரில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்தாண்டு நாட்டில் தென்மேற்கு பருவமழை காலதாமதமாக தொடங்கியது. அதோடுமட்டுமல்லாது கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய மழை பெய்யவில்லை. இதனால் புஞ்சை நிலத்தில் விதைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் புதுடெல்லி, உத்திரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனை அடுத்து நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பஞ்சாப், அரியானா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகாரில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. மிகவும் வறட்சியில் பாதித்திருந்த அந்த மாநிலங்களுக்கு இந்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி உள்ளது. மாமூல் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையும் பாதித்துள்ளது. விவசாய மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிருக்கு இது மிகவும் சிறந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்கும் சண்டிகாரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்க ஆரம்பித்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்