முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தி மொழியை கற்க கூறிய பிரதிநிதி: வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்ட ஜொமேட்டோ நிறுவனம்

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தி மொழியை கற்க வேணடும் என ஜொமேட்டோ நிறுவன பிரதிநிதி ஒருவர் வாடிக்கையாளரிடம் பேசிய நிலையில் அதற்காக தற்போது ஜொமேட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் பிரதிநிதியின் செயலுக்காக அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவு பிரதிநிதி, வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.

விகாஸ் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தான் ஜொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்தபோது, தான் ஆர்டர் செய்ததில், ஒரு உணவுப் பொருள் வராதது குறித்து ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார்.

அந்த பிரதிநிதி, "இந்தி தெரியாததால் பணத்தைக் கொடுக்க முடியாது," என கூறியதாகவும், அந்த வாடிக்கையாளர் பிரதிநிதிக்கு தமிழ் தெரியாததால், தன்னைப் பொய்யர் என கூறியதாகவும் விகாஸ் தெரிவித்திருந்தார். இதன் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், 'பாய்காட் சொமேட்டோ' என, சொமேட்டோவைப் புறக்கணிக்குமாறு ட்விட்டரில் பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு சொமேட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து, விளக்கம் அளித்துள்ளது. அதில் எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்க் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம் என சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து