முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மீன் மஞ்சூரியன்

Cooking time in minutes: 
30
Ingredients: 

மீன் மஞ்சூரியன் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. நெய் மீன் - 1/2 கிலோ.
  2. பச்சை மிளகாய் சாஸ் - 3 ஸ்பூன்.
  3. தக்காளி சாஸ் - 3 ஸ்பூன்.
  4. சோயா சாஸ் - 3 ஸ்பூன்.
  5. மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
  6. பெரிய வெங்காயம் - 2.
  7. இஞ்சி பூண்டு விழுது  2 ஸ்பூன்.
  8. பச்சைமிளகாய் -  4.
  9. பூண்டு - 10 பல்.
  10. கான்பிளவர் மாவு - 50 கிராம்.
  11. அரிசி மாவு - 10 கிராம்.
  12. கடலை மாவு - 10 கிராம்.
  13. ரிபைன்ட்  ஆயில் 500 மில்லி.
  14. உப்பு -  தேவையான அளவு .
Method: 

 

செய்முறை ; 

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து நறுக்கி வைத்த 1/2 கிலோ நெய் மீனை போடவும்.
  2. இதனுடன் கான்பிளவர் மாவு  50 கிராம்,அரிசி மாவு  10 கிராம்,கடலை மாவு 10 கிராம், மிளகாய் தூள் 2 ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு உப்பு  போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக கலந்து 1/2 மணி நேரம் ஊற விட வேண்டும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 400 மில்லி உற்ற வேண்டும்.
  4. எண்ணெய் சூடானவுடன் மசால் கலந்து ஊற வைத்த நெய்மீனை  ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வறுக்கவும். திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நெய் மீன் நன்றாக பொரிந்து விட்டது இதை ஒரு தட்டில் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 100 மில்லி ஊற்ற வேண்டும்.
  6. எண்ணெய் சூடானவுடன் நறுக்கி வைத்த பூண்டு  10 பல், நறுக்கி வைத்த 2 பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
  7. நறுக்கி வைத்த 4 பச்சை மிளகாய்யை போட்டு வதக்கவும்.
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், பச்சைமிளகாய் சாஸ்  3 ஸ்பூன்,
  9. தக்காளி சாஸ்  3 ஸ்பூன்,சோயா சாஸ்  3 ஸ்பூன் மற்றும் உப்பு தேவையான அளவு  போட்டு நன்கு கிளறி விடவும்.
  10. வறுத்து வைத்த நெய் மீனை போட்டு கலந்து விடவும்.
  11. சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.
  12. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  13. சுவையான மீன் மஞ்சூரியன் ரெடி.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago