முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      உலகம்
UAS 2025-04-18

Source: provided

அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மத்திய அமெரிக்கா நாடுகளில் ஒன்று பெலிஸ். குட்டி நாடான பெலிஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 4 லட்சம்தான். பெலிஸ் நாடு சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பெலிஸ் நாட்டுக்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில், பெலிசில் இருந்து சிறிய ரக விமானத்தில் 14 பயணிகள் சான் பிட்ரோ நகரை நாக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த விமானத்தில் 14 பயணிகளுடன், 2 விமானிகள் இருந்தனர். நடு வானில் விமானம் பயணித்து கொண்டிருந்தபோது சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கத்தியை எடுத்து பயணிகளை மிரட்டினார். அதோடு பயணிகளை தாக்கினார். இதில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.  மேலும் விமானத்தை கடத்த முயன்றார்.இதனால் விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பயணிகள் அனைவரும் பயந்துபோயினர்.அதேநேரத்தில், விமானத்தில் பயணித்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விமானத்தை கடத்திய நபரை சுட்டார்.  இதில், விமானத்தை கடத்த முயன்றவரின் உடலில் குண்டு பாய்ந்தது. பின்னர், விமானம் மீண்டும் பெலிஸ் நகரில் உள்ள பிலிப் எஸ்டபிள்யூ கோல்ட்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. குண்டு காயத்துடன் உயிருக்கு போராடிய அந்த நபர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து