முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் மூடல்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Nellaiappar 2024-10-29

Source: provided

விழுப்புரம் : பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் நேற்று மூடப்பட்டது

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதும், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான தர்மராஜா, திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. கடந்த 7.4.2023 அன்று நடந்த தீமிதி திருவிழாவில் ஒரு தரப்பினர் வழிபட மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 7.6.2023 அன்று கோவில் தற்காலிகமாக பூட்டி சீல் வைக்கப்பட்டது.  

இந்நிலையில் கோவிலுக்குள் அனைத்து தரப்பு மக்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று  கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து தரப்பு மக்களின் வழிபாட்டுக்காக நேற்று முன்தினம் அதிகாலை 5.35 மணியளவில் கோவில் திறக்கப்பட்டது. முன்னதாக கோவிலில் பாதுகாப்புக்காக 800 போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 6.20 மணியளவில் பக்தர்கள், கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.  இதில் ஒரு தரப்பினரை போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதற்கிடையே கோவிலில் ஒரு தரப்பினர் தரிசனம் செய்ய மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.  இதையடுத்து பொதுமக்கள் அனைவரையும் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து, மற்றொரு தரப்பினர் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு வருவதாக கூறி இருந்தனர். ஆனால் பக்தர்கள் யாரும் வராததால் கோவில் நடை மூடப்பட்டது. நேற்று முன்தினம் பட்டியலின மக்கள் சென்று அம்மனை வழிபட்ட நிலையில், நேற்று மற்றொரு சமூகத்தினர் கோவிலுக்கு வரவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து