எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னையில் விசாரணைக்கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக முதல்வர் சட்டபேரவையில் குறிப்பிட்ட செய்தியும், தற்போது விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையில் வெளியாகியுள்ள செய்தியும் முரண்பட்ட காரணத்தால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தி, சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்குநிலை குறித்து அ.தி.மு.க. சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு தமிழக முதல்வர் பதிலளித்துப் பேசினார். இதையடுத்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரையும், விசாரணைக்காக தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் விக்னேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த மர்ம மரணம் குறித்து சட்டப்பேரவையில் நான் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அதற்கு முதல்வரும் பதிலளித்தார்.
முதல்வர் பதிலளிக்கும் போது, மர்மமான முறையில் விக்னேஷ் இறந்ததாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நாளன்று முதல்வர் அளித்தப் பதிலில், 19.4.2022 அன்று விக்னேஷ் மற்றும் சுரேசுக்கு காலை உணவு வழங்கப்பட்டதாகவும், விக்னேஷ் சாப்பிட்ட பின்னர், வாந்தியெடுத்து வலிப்பு வந்தவுடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாகவும், மேல் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறினார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையின்போது, விக்னேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஆனால், தற்போது விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் விக்னேஷ் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அந்த தாக்குதலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், முகத்தின் தாடைப்பகுதி, தோள்பட்டை, இடதுதொடை பகுதியின் மேல்பகுதி முதல் கீழ் முட்டிவரை என 13 இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், வலதுகால் எலும்பு முறிவு மற்றும் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே முதல்வர் சட்டமன்றத்தில் விக்னேஷ் மரணம் தொடர்பாக குறிப்பிட்ட செய்தியும், தற்போது விக்னேஷின் உடற்கூராய்வு அறிக்கையில் வெளியாகியுள்ள செய்தியும் முரண்பட்ட காரணத்தால், இந்த வழக்கு நேர்மையாக முறையாக விசாரிக்க வேண்டும் என்றால் வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால், முதல்வர் எங்களது கோரிக்கையை ஏற்காமல், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் சி.பி.ஐ.யிடம் இந்த வழக்கை ஒப்படைத்தால்தான் வழக்கு முறையாக நடைபெறும். இந்த வழக்கை தமிழக போலீஸாரே விசாரித்தால், இந்த விசாரணை நியாயமான முறையாக நடைபெறாது. நியாயம் கிடைக்காது.
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வெளிநடப்பு செய்துள்ளோம் என்று அவர் கூறினார். மேலும், தருமபுரம் ஆதீனத்தை பழிவாங்கும் நோக்குடன் பட்டிணப் பிரவேச நிகழச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அந்த நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்6 hours 3 min ago |
ஸ்வீட் பால்.3 days 12 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
சத்தீஷ்கரில் நடந்த என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக்கொலை
30 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அதிரடிப் படையினர் மற்றும் நக்சலைட்டுகள் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
இன்று மே தினம்: எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
30 Apr 2024சென்னை : மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க .பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ம் தேதி நடத்தக்கூடாது : டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
30 Apr 2024சென்னை : ஜூன் 1-ம் தேதி மக்களவைக்கான கடைசி கட்டத் தேர்தலுடன் இணைத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலை நடத்த ஆணையம் தீர்மானித்திருந்தால் அந்த முடிவை கைவிட
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 36-வது முறையாக நீட்டிப்பு
30 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூன் 4-ம் தேதி வரை 36-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
30 Apr 2024நாகை : நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்பு : முதல்வர் ஸ்டாலினுக்கு எடப்பாடி கோரிக்கை
30 Apr 2024சென்னை : தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிப்படைந்துள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல்
30 Apr 2024சனா : செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-
ஏற்காட்டில் தனியார் பேருந்து விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
30 Apr 2024ஏற்காடு : ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வெறுப்பு பேச்சுகளால் பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
30 Apr 2024சென்னை : மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கிற, அரசமைப்புச் சட்ட விரோத வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பா.ஜ.க.
-
இலங்கையில் அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்டோபர் 5-ல் நடத்தப்படும் : மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தகவல்
30 Apr 2024ஸ்டாக்ஹோம் : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 28 அல்லது அக்டோபர் 5-ம் தேதி நடத்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திச
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
30 Apr 2024விருதுநகர், மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணி முழு செலவையும் ஏற்கிறது இந்தியா : இலங்கை தகவல்
30 Apr 2024கொழும்பு : காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு மேலும் தண்ணீர் திறக்க முடியாது : ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடகா பிடிவாதம்
30 Apr 2024புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு காவிரியில் 95 டி.எம்.சி நீர் வழங்க வலியுறுத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு மேலும்
-
அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் குறித்து கார்கே முடிவு செய்வார் : காங்கிரஸ் அறிவிப்பு
30 Apr 2024புதுடெல்லி : அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை கார்கே முடிவு செய்வார் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 9 வீரர்கள் பலி
30 Apr 2024பொகோடா : கொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 வீரர்கள் உயிரிழந்தனர்.
-
கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
30 Apr 2024சென்னை : கோவை தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரிய மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
ஒடிசா சட்டசபை தேர்தல்: முதல்வர் நவீன் பட்நாயக் வேட்புமனு தாக்கல்
30 Apr 2024புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஹிஞ்சிலி சட்டசபை தொகுதியில் பிஜு ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் நேற்று தனது
-
பதஞ்சலி நிறுவனத்தின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்தது உத்தரகாண்ட் மாநில அரசு
30 Apr 2024டேராடூன் : பதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்களை ரத்து செய்து உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும்: தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் மேலும் உயரும்
30 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக வட உள்மாவட்டங்களில் இன்று வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை மேல
-
நாங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கிறோம்: பாக். தலைவர் மவுலானா ரஹ்மான் வேதனை
30 Apr 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பார்லிமென்டில் பேசிய அந்நாட்டு தலைவர் ஒருவர், நமது அண்டை நாடு, உலகளவில் சூப்பர் பவர் ஆக கனவு காணும் நிலையில், நாம் நிதிக்காக பிச்சையெடுக்கிறோம்
-
பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன்: ஆந்திராவில் பா.ஜ. கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
30 Apr 2024அமராவதி : ஆந்திராவில் பெண்களுக்கு மாதம் ரூ.1500 பென்சன் உள்ளிட்ட வாக்குறுதிகள் அடங்கிய பா.ஜ.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
-
ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேர் நேரில் ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
30 Apr 2024சென்னை : ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.