முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி: பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை வரை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      இந்தியா
Om-Birla 2023 01 22

Source: provided

புதுடெல்லி : எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். 

இந்த ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானமும், பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற வேண்டும். 

இந்த நிலையில், அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை செய்ய பாராளுமன்ற கூட்டுக்குழு அல்லது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. 

இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடியது. 

எல்.ஐ.சி. நிறுவனம், அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தது மற்றும் அரசு வங்கிகள் அதானி குழுமத்திற்கு வழங்கியுள்ள கடன்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். அதானி குழும விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நேற்றும் பாராளுன்றத்தில் அமளியில் ஈடுபட்டன. 

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களை அமைதி காக்க வலியுறுத்தினார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் அவையை நேற்று மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார். 

இந்த நிலையில் இரு அவைகளும் நேற்று மதியம் 2 மணிக்கு மேல் கூடியது. அப்போதும் அதானி குழும முறைகேடு விவகாரம், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதை தொடர்ந்து எதிர்க்கட்சியின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் இன்று காலை 11 மணி வரை  ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து