முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் மீட் பால் கறி

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் மீட் பால் கறி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. கைமா செய்த சிக்கன் - முக்கால் கிலோ.
  2. முட்டை - 2.
  3. உருளைக்கிழங்கு - 1.
  4. மிளகுதூள் -  ஒரு ஸ்பூன். 
  5. இஞ்சி - 2 துண்டுகள். 
  6. பூண்டு - 4 பல்.
  7. எண்ணெய்  - தேவையான அளவு. 
  8. கார்ன்பிளவர் மாவு - 5 ஸ்பூன்.  
  9. அரிசி மாவு - 2 ஸ்பூன். 
  10. பட்டர் - 2 ஸ்பூன். 
  11. நல்லெண்ணெய் - 1/2 ஸ்பூன்.
  12. தயிர் - 2 ஸ்பூன்.
  13. மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்.  
  14. மிளகுதூள் - 1/2 ஸ்பூன் ஸ்பூன். 
  15. கெட்டி பால் - ஒரு ஸ்பூன். 
  16. மல்லி இலை - சிறிதளவு.
  17. உப்பு - தேவையான அளவு.
Method: 

செய்முறை ;

  1. ஒரு பாத்திரத்தில் கைமா செய்த முக்கால் கிலோ சிக்கனை போட்டு,2 முட்டையை உடைத்து ஊற்றி,தோல் சீவிய ஒரு உருளைக்கிழங்கு,தோல் சீவிய ஒரு  துண்டு இஞ்சி,பூண்டு 4 பல்,நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கார்ன்பிளவர் மாவு, ஒரு ஸ்பூன் அரிசி மாவு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். 
  3. இதில் உருட்டிவைத்துள்ள சிக்கன் உருண்டையை போட்டு கார்ன்பிளவர் மாவு உருண்டையின் அனைத்து பகுதியிலும் படும் படி நன்றாக பிரட்டி தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து  வைத்துள்ள சிக்கன் உருண்டையை ஒவ்வொன்றாக போட்டு பொரிக்கவும், திருப்பி போட்டு ஒரு ஸ்பூன் பட்டர் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் பட்டரை  போடவும்.
  7. பட்டர்  சூடானவுடன் பொடியாக நறுக்கிய ஒரு துண்டு இஞ்சியை போட்டு வதக்கவும்.
  8. இதனுடன் ஒரு ஸ்பூன் கார்ன்பிளவர் மாவு, ஒரு ஸ்பூன்அரிசி மாவு,2 ஸ்பூன் தயிர்,1/2 ஸ்பூன் மிளகாய்தூள்,1/2 ஸ்பூன் ஸ்பூன் மிளகுதூள் மற்றும் ஒரு கப் தண்ணிர் ஊற்றி கலந்து விடவும்.
  9. இதனுடன்  ஒரு ஸ்பூன் கெட்டி பால்,தேவையான அளவு உப்பு போட்டு எண்ணெயில் பொரித்த  சிக்கன் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு சிறிதளவு மல்லி இலைகளை போட்டு கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான சிக்கன் மீட் பால் கறி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago