முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். தொடரில் 5 -வது தோல்வி அரை இறுதியில் நுழைவது கடினம் -சேவாக் வேதனை

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 30  - இந்தியன் பிரீமியர் லீக் 20 - க்கு 20 போட்டியில், டெல்லி அணி 5 ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் அரை இறுதிக்குள் நுழைவது கடினம் என்று அந்த அணியின் கேப்டனும் அதிரடி வீரருமான வீரேந்தர் சே வாக் தெரிவித்தார். இது பற்றிய விபரம வருமாறு -  ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லிடேர்டெவில்ஸ் அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் சமீபத்திய தோல்விகளே இதற்கு காரணமாகும்.
கடந்த 28 -ம் தேதி நடந்த லீக் ஆட்டத்தில் சேவாக் தலைமையிலான டெல்லி அணி, காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது. இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை அளித்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ண யிக்கப்பட்ட  20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்னை எடுத்தது. மனோஜ் திவாரி 47 பந்தில் 61 ரன்னும், (2 பவுண்டரி, 3 சிக்சர் ) எடுத்
தார்.
பின்னர் ஆடிய டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்னை எடு
த்தது. சேவாக் அதிகபட்சமாக, 23 பந்தில் 34 ரன் எடுத்தார். இக்பால் அப்துல்லா 3 விக்கெட்டும், எல். பாலாஜி 2 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.
டெல்லி அணி இதன் மூலம் 5 -வது தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே மும்பை, ராஜஸ்தான், டெக்கான் மற்றும் பெங்களூர் அணிகளி டம் தோற்றது. அந்த அணி இதுவரை 2 ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இனிமேல் 7 ஆட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி உள்ளது. இதில் அனைத்திலும் அந்த அணி வெற்றி பெற்றால் தான் அரை இறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை உள்ளது.
இந்தத் தோல்வி குறித்து டெல்லி அணிக் கேப்டன் சேவாக் நிருபர்கள் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு - தற்போது நடைபெற்று வரும் தொடரில் 5 -வது தோல்வியால் எங்களது அணிக்கு மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனால் அரை இறுதியில் நுழைவது என்பது கடினமே. இனி வரும் அனைத்து ஆட்டத்திலும் நாங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது பேட்டிங்கும், பெளலிங்கும் சிறப் பாக இருக்க வேண்டும்.
அரை இறுதிக்குள் நுழைவது என்பது முடியாத விஷயம் இல்லை. முத
லில் 2 அல்லது 3 ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். அப்போது தான் வாய்ப்பில் இருக்க முடியும்.
ஆனால் அது உண்மையில் கடினமானது. மற்ற அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் கொஞ்சம் கஷ்டம் தான். இருந்
தாலும் கடைசி வரை நாங்கள் போராடுவோம்.
கொல்கத்தா அணியை தோற்கடிக்க நாங்கள் திட்டமிட்டு தான் விளையாடினோம். ஆனால் அதற்கு தகுந்த பலன் கிடைக்கவில்லை. இறுதியில் தோல்வி அடைந்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக் கேப்டன் காம்பீர் கூறியதாவது - நாங்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக விளையாடினோம். எனவே தான் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடிந் தது.
148 ரன் இலக்கு என்பது எளிதான இலக்கு தான். டெல்லி அணி வெற் றி பெற வாய்ப்பு இருந்தது. ஆனால் எங்களது பெளலர்கள் சிறப்பாக
பந்து வீசி வெற்றிக்கனியை சமர்ப்பித்தனர். இதே போல பீல்டிங்கு சிறப்பாக இருந்தது.
இனிவரும் ஆட்டங்களிலும், இதே நிலை தொடர ரேண்டும் என்பதே எனது விருப்பமாகும். மனோஜ் திவாரியின் பேட்டிங் அபாரமாக இஉரந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தொடரில் கொல்கத்தா அணி பெற்ற 4 -வது வெற்றி இதுவாகு ம். அந்த அணி 8 புள்ளிகளுடன் 2 -வது இடத்தில் உள்ளது. கொல்கத் தாஅணி அடுத்ததாக பஞ்சாப் அணியை சந்திக்கிறது.
அதே நேரத்தில் கேப்டன் வீரேந்தர் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் சங்கக்கரா தலைமையிலான கொச்சி அணியை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்