முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது பிரேசில்

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      உலகம்
Modi 2023-12-01

Source: provided

ரியோ டி ஜெனிரோ : ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை பிரேசில் நேற்று முதல் முறைப்படி ஏற்றுள்ளது. அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  

ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பாக நடைபெற்றது. அமைப்பின் தலைவரான இந்தியா, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டை நடத்தியது. 

இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஜி-20 மாநாடு சிறப்பாக நடைபெற்ற பின்னர், அமைப்பின் அடுத்த ஆண்டுக்கான தலைவர் பொறுப்பை பிரேசில் அதிபர் லூயிஸ் லுலா டாசில்வாவிடம் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

இந்த நிலையில், அதிகாரம் மிக்க இந்த அமைப்பின் தலைவர் பதவியை நேற்று முதல் பிரேசில் நாடு முறைப்படி அலங்கரித்துள்ளது. அத்துடன் அடுத்த உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நவம்பர் இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து