முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2023-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக 'ரிஸ்' தேர்வு

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      உலகம்
Oxford-University 2023-12-0

Source: provided

லண்டன் : ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியை வெளியிடும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அச்சகம், 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ரிஸ் (Rizz) என்ற வார்த்தையை தேர்வு செய்துள்ளது.

சிறந்த வார்த்தை தேர்வுக்காக இறுதியாக பட்டியலிடப்பட்ட 8 வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த 8 வார்த்தைகளும், 2023ல் மக்களின் மனநிலை, ஆர்வம் மற்றும் அக்கறைகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் சிறந்த வார்த்தையாக ரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்கான இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு, ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் பொது வாக்கெடுப்பு நடத்தினர்.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அரட்டையடிப்பதில் அல்லது ஊர் சுற்றுவதில் நீங்கள் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால், உங்களுக்குத் தெரிந்திருக்காவிட்டாலும், இந்த ரிஸ் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கலாம். காதலை வெளிப்படுத்துதல் அல்லது கவர்ச்சிக்கான இணைய மொழியாக பெரும்பாலும் இளைஞர்களால் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. கடந்த 12 மாதங்களில் இந்த வார்த்தை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரிஸ் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்டு அகராதி விளக்கம் வருமாறு., ஸ்டைல், வசீகரம் அல்லது கவர்ச்சி; காதல் அல்லது பாலியல் துணையை ஈர்க்கும் திறன். சுருக்கமாக, இது 'கரிஸ்மா' (charisma) என்ற வார்த்தையின் மையப்பகுதி. ரிஸ் என்பதை ஒரு வினைச்சொல்லாகவும் (Verb) பயன்படுத்தலாம். அதாவது யாரையாவது கவர்ந்திழுப்பது, மயக்குவது அல்லது ஜாலியாக அரட்டையடிப்பதற்கான வாக்கியத்தில் "to rizz up" போன்ற சொற்களை பயன்படுத்தலாம். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து