முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை: அனைத்து சட்ட, தூதரக உதவிகளை விரிவுபடுத்தும் வெளியுறவுத்துறை

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த விசயத்தில் அனைத்து சட்ட உதவிகளையும் விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது., இதுவரை 2 விசாரணைகள் நடந்துள்ளன. குடும்பத்தினரிடம் இருந்து மேல்முறையீடு செய்தோம், கைதிகள் இறுதி மேல்முறையீடு செய்தோம். அதன்பிறகு 2 விசாரணைகள் நடைபெற்றன. இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்துகிறது.

இதற்கிடையே, டிசம்பர் 3-ம் தேதி சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதனால் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், நாங்கள் எதைப்பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து