முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 500 இடங்களில் இலவச வைஃபை சேவை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Stalin-

Source: provided

சென்னை:சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

2021-2022ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் போது,  யுமாஜின் (UMAGINE) – வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அதன்படி,  முதலாவது “UmagineTN” மாநாடு 2023ம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக,  இந்த ஆண்டும்,  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “UmagineTN 2024” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் நேற்றும் நாளையும் நடைபெறுகிறது.  இந்த மாநாட்டை முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இலவச வைஃபை வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிதிநிலை அறிக்கையில் சென்னை,  கோவை,  மதுரை,  திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 1,000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவை வழங்கப்படும் என தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  இதன் முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பூங்காக்கள்,  பேருந்து நிலையங்கள்,  கடற்கரைகள் போன்ற சென்னையின் 500 முக்கிய இடங்களில்  தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து