முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஹனி பட்டர் சிக்கன்

Cooking time in minutes: 
20
Ingredients: 

ஹனி பட்டர் சிக்கன் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. சிக்கன் துண்டுகள் - 6. (நெஞ்சு கறி)
  2. உப்பு - தேவையான அளவு.
  3. மிளகு தூள் - ஒரு ஸ்பூன்.
  4. மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்.
  5. மைதா மாவு – 3 ஸ்பூன்.
  6. பட்டர் - 2 ஸ்பூன்.
  7. மையோனஸ் -1/2 ஸ்பூன்.
  8. கறி மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  9. பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல். 
  10. சோயா சாஸ் - 2 ஸ்பூன். 
  11. தேன் - ஒரு ஸ்பூன். 
  12. வினிகர் - 2 ஸ்பூன். 
Method: 

செய்முறை ;--

  1. ஒரு பாத்திரத்தில் 6 சிக்கன்  துண்டுகளை எடுத்துக்கொள்ளவும்.
  2. இதனுடன் தேவையான அளவு உப்பு,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் மிளகுத் தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும். 
  3. ஒரு தட்டில் 3 ஸ்பூன் மைதாமாவை எடுத்துக்கொண்டு தயார் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மைதாமாவில் போட்டு சிக்கன் துண்டின்  எல்லா பக்கங்களிலும் மைதா மாவு ஒட்டும்படி நன்றாக பிரட்டி எடுத்து  தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து 2  ஸ்பூன் பட்டர் ஊற்றவும்.
  5. பட்டர் சூடானவுடன்  தயார் செய்து வைத்துள்ள சிக்கன்  துண்டுகளை போட்டு பொரிக்கவும்.
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
  7. இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடாயை மூடி போட்டு மூடி 5 நிமிடம் சிக்கன்  துண்டுகளை நன்றாக வேக வைக்கவும்.
  8. 5 நிமிடம் கழித்து கடாயின் மூடியை திறந்து சிக்கன்  துண்டுகளை திருப்பி போட்டு மேலும் 5 நிமிடம்  நன்றாக வேக வைக்கவும்.
  9. 5 நிமிடம் கழித்து கடாயின் மூடியை திறந்து 1/2 ஸ்பூன் மையோனஸ்,கறி மசாலா தூள்,ஒரு ஸ்பூன்,பொடியாக நறுக்கிய 5 பல் பூண்டு,சோயா சாஸ் 2 ஸ்பூன்,தேன் ஒரு ஸ்பூன்மற்றும் வினிகர் 2 ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான ஹனி பட்டர் சிக்கன் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago