முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

12-ம் தேதி தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி : நெல்லை, கோவையில் பிரச்சாரம்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      தமிழகம்
Rahul-Gandhi-1 2023 03 30

Source: provided

சென்னை : ராகுல்காந்தி 12-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அவர் கோவை மற்றும் நெல்லை தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரும் 15-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சில இடங்களில் பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

இதற்கிடையில் தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். இந்நிலையில், ராகுல்காந்தி வரும் 12-ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது அவர் கோவை மற்றும் நெல்லை தொகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  மேலும் ராகுல்காந்தி முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து