முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக அபுதாபி இந்து கோவிலில் சைவ உணவுடன் நடந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி

வியாழக்கிழமை, 4 ஏப்ரல் 2024      ஆன்மிகம்
Abu-Dhabi-Hindu-Temple-2024

அபுதாபி, அபுதாபி இந்து கோவிலில் முதல் முறையாக சைவ உணவுடன் கூடிய இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் அமீரக அமைச்சர்கள், யூத குருமார்கள் மற்றும் சீக்கியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில் உள்ள முரைக்கா பகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை கடந்த பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஜராத்தை சேர்ந்த பி.ஏ.பி.எஸ். அமைப்பு இந்த கோவிலை நிர்வகிக்கிறது. 

மதநல்லிணக்கத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த இந்து கோவிலை அனைவரும் பாகுபாடின்றி பார்வையிட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது. 

தற்போது ரமலான் மாதம் நடந்து வருவதால் முதல் முறையாக இப்தார் நிகழ்ச்சிக்கு அபுதாபி இந்து கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டது. மதநல்லிணக்கம், சகோதரத்துவத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க கோவில் வளாகத்துக்கு வந்த அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான், அமீரக வெளிநாட்டு வர்த்தகத் துறையின் ராஜாங்க அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் ஜையூதி, சமூக வளர்த்துறையின் தலைவர் டாக்டர் முகீர் காமிஸ் அல் கைலி ஆகியோரை பி.ஏ.பி.எஸ். அபுதாபி இந்து கோவிலின் தலைமை குரு சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் கட்டித்தழுவி வரவேற்றார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் யூத குருமார்கள், சீக்கியர்கள், அரசுத்துறை தலைவர்கள், தூதர்கள், தூதரக அதிகாரிகள், சமூக அமைப்புகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.  

மேலும் இந்த இப்தார் விருந்து நிகழ்ச்சியில் இந்து கோவிலின் தன்னார்வலர்கள் தயாரித்த சைவ உணவு வகைகள் பரிமாறப்பட்டது. தொடர்ந்து அந்த வளாகத்தில் அதிகாலையில் நோன்பு வைப்பதற்கு முன் உண்ணப்படும் சஹர் உணவும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது . 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து