முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு இனி ஷிப்ட் அடிப்படையில் வேலை : தமிழ்நாடு அரசாணை வெளியீடு

சனிக்கிழமை, 18 மே 2024      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது.

“காலை 6 மணி முதல் மணி 1 மணி வரை முதல் ஷிப்ட், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டாவது ஷிப்ட், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை மூன்றாவது ஷிப்ட் என 3 ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அரசாணையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலிய உதவியாளர் தரம் -2, மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் இனி பணி அமையும். முதல் ஷிப்ட்டில் 50 சதவீத பணியாளர்களும், மற்ற இரண்டு ஷிப்ட்களில் தலா 25 சதவீத பணியாளர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள்” என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து