முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் இந்திய இளைஞரை சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2024      உலகம்
Canada 2024-05-11

Source: provided

ஒட்டாவா : கனடாவில், 28 வயது இந்திய இளைஞரை, மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.

வட அமெரிக்க நாடான கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே பகுதியில் உள்ள கார் நிறுவனத்தில் யுவராஜ் கோயல்(28) என்ற இந்திய இளைஞர் பணியாற்றி வந்தார்.

இவர், பஞ்சாப் மாநிலம் லுாதியானாவை சேர்ந்தவர்.  கடந்த 7-ம் தேதி காலை அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே வந்த அவர், இந்தியாவில் வசிக்கும் தன் தாயிடம் மொபைல் போனில் பேசி உள்ளார்.  அப்போது மர்ம நபர்கள், யுவராஜ் கோயல் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடினர். 

தகவலறிந்து வந்த போலீசார், யுவராஜ் கோயலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.  இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மான்வீர் பாசுராம், 23, சாஹிப் பாஸ்ரா, 20, ஹர்கிராட் ஜூடி, 23, கெய்லான் பிரான்கோஸ், 20, ஆகிய நான்கு பேரை போலீசார் சந்தேகத்தின்பேரில் கைது செய்துள்ளனர்.

எதற்காக யுவராஜ் கோயல் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, யுவராஜ் மீது எந்த குற்றப்பின்னணியும் இல்லாத நிலையில், அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து