முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி கோவிலில் ஆவணி மூல திருவிழா : 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Meenachi 2024-04-19

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பல்வேறு சிறப்புகள், திருவிளையாடல்கள் நிறைந்த ஆவணி மூல திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் கொடியேற்றப்படுகிறது. 

அன்று முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை இரண்டாம் பிரகாரத்தில் காலை மற்றும் இரவு சுவாமி சந்திரசேகர் உற்சவ புறப்பாடு நடைபெறும். 5-ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடலும், 6-ம் தேதி நாரைக்கு மோட்சம் அருளிய திருவிளையாடலும், 7-ம் தேதி மாணிக்கம் விற்ற திருவிளையாடலும், 8-ம் தேதி தருமிக்கு பொற்கிழி அருளிய திருவிளையாடலும், 9-ம் தேதி உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடலும், 10-ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய திருவிளையாடலும் நடக்கிறது.

11-ம் தேதி காலை வளையல் விற்ற திருவிளையாடலும் அன்று மாலை 6:30 மணிக்கு மேல் 6:45 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் 12-ம் தேதி நரியை பரிதாக்கிய திருவிளையாடல் குதிரை கயிறு மாறிய திருவிளையாடல் நடக்கிறது. 13-ம் தேதி புட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நடக்கிறது. 

அன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோவிலில் இருந்து புறப்பாடாகி ஆரப்பாளையம் புட்டு தோப்புக்கு சென்று அங்கு புட்டு உற்சவம் நடைபெற்று இரவு 9 மணி அளவில் எழுந்தருளி திருக்கோவில் வந்து சேர்த்தியாவார்.

14-ம் தேதி விறகு விற்ற லீலை நடக்கிறது. 15-ம் தேதி காலை 8:35 மணிக்கு மேல் 8 59 மணிக்குள் சட்டத்தேர் நடக்கிறது. 16-ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. அன்று இரவு திருவீதி புறப்பாடு முடிந்து 16 கால் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமியும் திருவாதவூர் மாணிக்கவாசகர் விடை பெறுதல் நிகழ்வும் நடக்கிறது. 

இறைவன் மதுரையம்பதியில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களில் 12 சிறுவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவில் முக்கிய அம்சங்களாக அமைவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து