முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரக்சா பந்தன் பண்டிகை: எடப்பாடி வாழ்த்து

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ரக்சா பண்டிகை நாளில் சகோதரிகள் தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறு கட்டி, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு வாழ்த்துவார்கள். பதிலுக்கு சகோதரர்களும், தனது சகோதரி வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக வாழ்வதற்கு உறுதியளித்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அத்துடன் சகோதரிகளுக்கு பரிசு அல்லது பணம் கொடுத்து மகிழ்ச்சி அடைய வைப்பார்கள். வட இந்தியாவில் பிரபலமாக உள்ள இந்த பண்டிகை, இப்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது. 

ரக்சா பந்தன் பண்டிகையையொட்டி அ.தி.மு.க. பொது செயலாளர்  எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சகோதரத்துவத்தை உணர்த்தும் ரக்சா பந்தன் திருநாளை அன்புச் சகோதரிகளுடன் செவ்வந்தி இல்லத்தில் கொண்டாடி மகிழ்வுற்றேன். மதங்களைத் தாண்டிய சகோதரத்துவம் என்றென்றும் தழைத்தோங்கட்டும்  என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து