முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்றார் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
CM-2 2024 08 19

Source: provided

சென்னை : தமிழக அரசின் புதிய தலைமை  செயலாளராக முருகானந்தம் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு ரியஸ் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி தலைமைச் செயலாளராக பதவியேற்ற சிவ்தாஸ் மீனா ஓராண்டுக்கும் மேலாக அந்த பதவியில் இருந்தார்.  சிவ்தாஸ் மீனா மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக தற்போது முதலமைச்சரின் தனி செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் தமிழக அரசின் 50-வது தலைமைச்செயலாளராக முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் 

சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார். இவர் பல்வேறு துறைகளில் பணியாற்றியவர். 2001 முதல் 2004-ம் ஆண்டு வரை கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். 

ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பதவி வகித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து