முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளம்பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்: பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட்

திங்கட்கிழமை, 19 ஆகஸ்ட் 2024      தமிழகம்
Arun (Police Commissioner)-2024-07-15

Source: provided

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவிவகாரத்தில் பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன் சில வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்கள் மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெண் எஸ்.ஐ சூர்யாவை ஆயுதப்படைக்கு மாற்றி காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பாப்பாநாட்டு பகுதியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு நீதி கிடைக்க வேண்டும் என கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அந்த பகுதியில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாகவும், கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

நிவாரண உதவி மட்டுமல்லாது அவருக்கு அரசாங்க வேலையும் கொடுக்க வேண்டும். புகாரை அலட்சியமாக விசாரித்த காவல்துறை எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் பெண் எஸ்.ஐ சூர்யாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து