முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் டாக்டர் கொலை வழக்கு: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் : போராட்டத்தை கைவிடுமாறு மருத்துவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடில்லி : கொல்கத்தாவில், பெண் மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கை பதிய தாமதம் ஏன் என்று கொல்கத்தா காவல்துறைக்கும், மேற்கு வங்க அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பிய நிலையில், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தை மருத்துவர்கள் கைவிட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

சஞ்சய் ராய் கைது... 

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு முதுநிலை 2-ம் ஆண்டு படித்த, 31 வயது பயிற்சி பெண் டாக்டர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

தாமாக முன்வந்து... 

இதற்கிடையே வழக்கை, சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், நேற்று (ஆகஸ்ட் 20) வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேசிய அளவில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள் என்பது காகித அளவில் இல்லாமல் செயலில் இருக்க வேண்டும். 

தேசிய அளவில் குழு... 

இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த டாக்டர்களின் பிரச்னை. டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பு பிரச்னைக்கு உரியதாகவே இருக்கிறது. டாக்டர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி உள்ளது.

சம உரிமை மறுப்பு...

போலீசார் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எப்.ஜ.ஆர்., ஏன் தாமதமாக பதிவு செய்யப்பட்டது? உடலை ஒப்படைத்த பின்னர் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது ஏன் ? பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களுக்கு சம உரிமை மறுக்கப்படுவதாக அர்த்தம். குற்றம் நடந்த பகுதிகளை சீலிடாதது ஏன் ? மாணவி தற்கொலைதான் என பெற்றோரிடம் கூறியது யார் ?

காலம் தாழ்த்தியது... 

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தும் வரை போலீசார் பார்த்து கொண்டிருந்தது ஏன்? தற்கொலை வழக்காக பதிவு செய்ய முயற்சித்ததாக சந்தேகம் வருகிறது. கொலை வழக்காகவோ அல்லது பலாத்காரம் தொடர்பாகவே வழக்கு பதியாமல் காலம் தாழ்த்தியது ஏன் ? கொல்லப்பட்ட பெற்றோர்கள் பல மணி நேரம் உடலை பார்க்க விடாமல் தடுத்தது ஏன் ? டாக்டர்களை காத்திட மேற்கு வங்க அரசு தவறி விட்டது.

அறிக்கை சமர்ப்பிக்க...

மருத்துவமனை கல்லூரி முதல்வர் மாற்று பணியிடத்தில் உடனே அமர்த்தியது ஏன் ?அமைதியாக போராடுவோர் மீது மேற்குவங்க அரசு தனது அடக்குமுறையை காட்டக் கூடாது. டாக்டர்கள் அல்லது பொதுமக்கள் மீது எந்த அரசும் அதிகாரத்தை ஏவி விடக்கூடாது. ஆர்.ஜி.கார் மருத்துவமனை முதல்வர், பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார். விசாரணை அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 22) சி.பி.ஐ.. சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த டாக்டர்களின் பிரச்சினை என குறிப்பிட்ட நீதிபதிகள், பயிற்சி டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க உத்தரவிட்டனர். 

கவனத்தில் கொள்ள... 

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர் குறித்து பேசிய நீதிபதிகள், "தயவு செய்து எங்களை நம்புங்கள், போராட்டத்தை கைவிடுங்கள். டாக்டர்களின் பாதுகாப்பு தேசிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். எனவேதான் இந்த விவகாரத்தை நாங்கள் ஐகோர்ட்டிடம் விடவில்லை. உங்கள் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தனர். பின்னர், இளம் பருவத்தினர் தொடர்புடைய வழக்கில் நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட் வெளியிட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து