முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 ஒப்பந்தங்கள் கையெழுத்து: மலேசியாவின் மலாயா பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு : பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2024      இந்தியா
mODI 2023-05-25

Source: provided

புதுடெல்லி, : மலேசியாவின் மலாயா பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, இந்திய தொழிலாளர்கள் மலேசியாவுக்கு செல்வதை எளிதாக்குவது, மலேசியாவின் மலாயா பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பது உள்ளிட்ட 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

மலேசிய பிரதமரின் இந்திய பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,  

பிரதமரான பிறகு அன்வர் இப்ராஹிம் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறை. எனது மூன்றாவது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட உத்திசார் கூட்டாண்மை பத்தாண்டுகளை நிறைவு செய்கிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளில், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் ஆதரவுடன், நமது கூட்டாண்மை புதிய வேகத்தையும், சக்தியையும் பெற்றுள்ளது. இன்று நாங்கள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான அனைத்து துறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தோம். நமது இருதரப்பு வர்த்தகம் நிலையான முன்னேற்றம் அடைந்து வருவதை நாங்கள் கவனித்தோம். இந்தியாவிற்கும், மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தை இப்போது இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட்களில் செயலாக்க முடியும். கடந்த ஆண்டு மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது.

இன்று நமது கூட்டாண்மையை விரிவான உத்திசார் கூட்டாண்மை என்று உயர்த்த முடிவு செய்துள்ளோம். பொருளாதார ஒத்துழைப்பில் இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு விரிவுபடுத்தப்பட வேண்டும். குறைகடத்திகள், பின்டெக், பாதுகாப்புத் தொழில், செயற்கை தொழில்நுட்பம் மற்றும் குவாண்டம் போன்ற புதிய தொழில்நுட்பத் துறைகளில் நமது பரஸ்பர ஒத்துழைப்பை நாம் மேம்படுத்த வேண்டும். 

இந்தியா, மலேசியா இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்வதை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். டிஜிட்டல் குழுவை உருவாக்கவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்கான புத்தொழில் நிறுவனங்களின் கூட்டணியை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து