எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : கல்வி தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும். தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகள். ஆய்வகங்கள். கழிவறைகள், சுற்றுச்சுவர்கள், மாணவ/மாணவிகளுக்கு தங்கும் விடுதிகள் அமைக்க பள்ளிக் கல்வி இயக்ககம் மூலம் 2022-2023ம் நிதியாண்டில் நபார்டு கடனுதவித் திட்டம் RIDF XXVIII-ன் கீழ் ரூ.813 கோடி செலவில் 418 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2394 கூடுதல் வகுப்பறைகள், 57 ஆய்வகங்கள், 10 மாணவ/மாணவிகள் தங்கும் விடுதிகள் ஏற்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டு, 1,545 பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்றனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் 25.8.2023 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு, 30 ஆயிரத்து 992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசின் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.
காலை உணவுத் திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காலை உணவைச் சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தினர்.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ.1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3,238 வகுப்பறைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 21 அறிவியல் ஆய்வகங்கள், உட்கட்டமைப்புகள் மேம்பாடு செய்யப்பட்டுள்ளன. ரூ.551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள். ரூ.436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்.
புதுடெல்லியில் 13.8.2024 அன்று மத்திய அரசின் உயர்கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் வெளியிட்டுள்ள தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர வரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள செய்திகள் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் மேலும் உயர்த்தியுள்ளன. அதாவது, தேசிய அளவில் தர வரிசைப்படுத்தப்பட்ட 926 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்லூரிகள் மட்டும் 165. அதற்கு அடுத்த நிலைகளில் டெல்லியில் 88 கல்லூரிகள், மகாராஷ்டிரத்தில் 30 கல்லூரிகள், கர்நாடாகாவில் 78 கல்லூரிகள், உத்தரப்பிரதேசத்தில் 71 கல்லூரிகள், அசாம் மாநிலத்தில் 15 கல்லூரிகள், மத்தியப் பிரதேசம், சண்டிகர், ஜார்கண்ட் ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் எனத் தரவரிசைப்படுத்தப்பட்டு உயர்கல்வியில் தலைசிறந்து விளங்குவது தமிழ்நாடு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.
புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள், காலை உணவுத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள் இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுப் பள்ளிகளுக்கு வரும் மாணவ-மாணவியர் எண்ணிக்கை உயர்ந்து, கல்வித் தரத்தில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2024.
08 Nov 2024 -
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Nov 2024சென்னை : தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை மற்றும் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
08 Nov 2024சென்னை, அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
கலைஞர் செம்மொழித் தமிழ் விருது: முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
08 Nov 2024சென்னை, 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கி சிறப்பித்தார்.
-
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 8 ஆண்டுகள் நிறைவடைந்தது
08 Nov 2024புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.
-
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
08 Nov 2024சென்னை : பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் : எலான் மஸ்க் கணிப்பு
08 Nov 2024வாஷிங்டன் : வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகரில் நேரடி கள ஆய்வு
08 Nov 2024சென்னை : விருதுநகரில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
சபரிமலையில் தரிசனத்துக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
08 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
கூட்டுறவு துறையின் தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
08 Nov 2024சென்னை, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.
-
தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்றும் வகையில் புதிய சட்டம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
08 Nov 2024ஜெருசலேம் : இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
த.வெ.க. மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து வழங்குகிறார் விஜய்
08 Nov 2024சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விஜய் விருந்து வழங்குகிறார்.
-
ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
08 Nov 2024ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம்
08 Nov 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
08 Nov 2024புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக சூசன் வைல்ஸ் : டொனால்டு டிரம்ப் நியமித்தார்
08 Nov 2024வாஷிங்டன் : தன்னுடைய தேர்தல் பிரச்சார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக டிரம்ப் நியமித்துள்ளார்.
-
கோலி குறித்து ஜோதிடர் கணிப்பு
08 Nov 2024இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தற்சமயத்தில் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக கருதப்படுகிறார். தற்சமயம் பார்மின்றி தவித்து வருகிறார்.
-
வெங்காயம் விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
08 Nov 2024சென்னை, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
-
வரும் ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை
08 Nov 2024பாரீஸ் : சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவானது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
-
இன்று முதல் தீர்ப்பளிக்க முடியாது: பிரியாவிடை நிகழ்ச்சியில் டி.ஒய்.சந்திரசூட் உருக்கம்
08 Nov 2024புதுதில்லி : யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இன்று முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
08 Nov 2024திருவண்ணாமலை : தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்
08 Nov 2024சென்னை : கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
-
டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: சுவாச பிரச்னையால் மக்கள் கடும் பாதிப்பு
08 Nov 2024புதுடெல்லி : டெல்லியின் ஆனந்த் விஹாரில் காற்று மாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ள நிலையில், அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு உடல்நிலை பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
-
ஜன. 20-ல் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் : அதிபர் ஜோ பைடன் பேட்டி
08 Nov 2024வாஷிங்டன் : ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
08 Nov 2024மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உத