முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனடைந்தவர்கள் விவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டம் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. இந்த திட்டத்தில் பயனடைந்தவர்கள் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பட்டதாரி பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தில் கடந்த 2017 - 2021ஆம் ஆண்டு வரை எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டத்துக்கு விண்ணப்பித்திருந்த தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சித்ரா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வீட்டு வேலை செய்து, தனது மகளை பட்டதாரி ஆக்கிய நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தில் தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தாலிக்கு தங்கம் திட்டத்துக்காக, 2017 - 2021ஆம் ஆண்டு வரை ஒதுக்கிய நிதி தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த தாலிக்கு தங்கம் திட்டத்தில் இதுவரை எத்தனை பேர் பயனடைந்துள்ளார்கள்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன? மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து