முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - ஜப்பானின் உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை : பிரதமர் மோடி டுவிட்டரில் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      உலகம்
Modi-Bumio-Kishida 2024-03-

Source: provided

வில்மிங்டன் : இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவையாக உள்ளன  என்று பிரதமர் மோடி தனது  டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் 4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு  சென்றடைந்த பிரதமர் மோடி, அதன் ஒரு பகுதியாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார். 

இதில், இரு நாடுகளின் உறவை இரு நாட்டு தலைவர்களும் மறுஆய்வு செய்தனர்.  இருதரப்பு உறவுகளை விரிவாக்கம் செய்வதற்கான வழிகளை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்பின்பு, இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், 

பிரதமர் கிஷிடாவுடன் நல்ல முறையில் சந்திப்பு நடந்தது.  உட்கட்டமைப்பு வசதிகள், குறைகடத்திகள், பாதுகாப்பு, பசுமை எரிசக்தி மற்றும் பிற விசயங்களில் ஒத்துழைப்புடன் செயல்படுவது பற்றி ஆலோசனை மேற்கொண்டோம். இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவையாக உள்ளன என பதிவிட்டு உள்ளார்.  

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா-ஜப்பான் நாடுகளின் சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய நட்புறவை மேம்படுத்துவதற்கு ஈடுஇணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை வழங்கி வருவதற்காக கிஷிடாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து