முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      தமிழகம்
CD-Mani 2024-03-22

Source: provided

சென்னை : சென்னையை கலக்கிய, ஏ பிளஸ் ரவுடியான பிரபல ரவுடி சிடி மணி துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தமிழகத்தையே உலுக்கியது. இதையடுத்து, சென்னையில் ரவுடிகள் ஒழிப்பு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி திருவேங்கடம் கடந்த ஜூலை மாதம் போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த 18-ம் தேதி, வட சென்னையை கலக்கிய பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜியும் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்தார். 

இந்த 2 ரவுடிகளும் பிடிக்கச் சென்ற போலீசார் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்களை தவிர கடந்த இரண்டரை மாதத்தில் 300-க்கும் மேற்பட்ட ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை சென்னையில் முடுக்கி விடப்பட்டுள்ளது. அந்த வகையில், போலீசாரால் அண்மையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நெருங்கிய கூட்டாளியும், நண்பருமான ஏ பிளஸ்வகையை சேர்ந்த பிரபல ரவுடி சி.டி. மணி (42) சென்னை போலீசாரால் சேலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். 

போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சென்னையை விட்டு தப்பி சி.டி. மணி சேலத்தில் பதுங்கி இருப்பதாக தெரிய வந்த தகவலின் பேரில் சென்னை போலீசார் அங்கு சென்று சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து