முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்து யாரை அழைப்பது என மறந்து மேடையில் தடுமாறிய ஜோபைடன்

ஞாயிற்றுக்கிழமை, 22 செப்டம்பர் 2024      உலகம்
Modi 2024-09-08

Source: provided

வாஷிங்டன் : குவாட் மாநாட்டின் போது, மேடையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்து யாரை அழைப்பது என மறந்து தடுமாறிய வீடியோ   வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 அமெரிக்க அதிபரான ஜோ பைடனுக்கு  81 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக தடுமாறி வருகிறார். இதனால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவில் குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது.  பிறகு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டம் துவக்க விழா நடந்தது.

இந்த திட்டத்தில் பேசிய ஜோபைடன், தலைவர்கள் ஒவ்வொருவரை அறிமுகம் செய்து பேசி கொண்டு இருந்தார்.  அப்போது பிரதமர் மோடியை அறிமுகம் செய்ய வேண்டிய நேரத்தில் அவருக்கு திடீரென மறதி ஏற்பட்டது. அடுத்து நான் யாரை அறிமுகம் செய்ய வேண்டும்? அடுத்தது யார்? என மைக்கில் கேட்டார். 

அப்போது, அங்கிருந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர், பிரதமர் மோடி எனக் கூறினார். உடனடியாக அங்கு மோடி எழுந்து வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு முன்னர், வாஷிங்டன்னில் நடந்த நேட்டோ மாநாட்டில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அறிமுகம் செய்யும் போது உக்ரைன் அதிபர் புடின் பெயரை கூறி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து