முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசடி வழக்கில் கைதானவருக்கு த.வெ.க. கட்சியுடன் தொடர்பா? - கரூர் மாவட்ட தலைவர் விளக்கம்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      தமிழகம்
Vijay 2024-02-18

Source: provided

கரூர் : மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலையில் மோசடி வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், கைது செய்யப்பட்ட ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மதியழகன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர் மாவட்டம், குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வந்து கொண்டுள்ளன.

கைது செய்யப்பட்ட ராஜாவிற்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.  அவருக்கு தமிழக வெற்றிக் கழகத்திலோ அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து