முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் மகளிர் திறன் மேம்பாடு மையம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகமே உயர்ந்து நிற்கும் என்றும் பெண் அதிகாரத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது என்றும் சென்னையில் மகளிர் திறன் மேம்பாடு மையத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையத்தை முதல்வர்  மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு இந்த மையம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்  மு.க.ஸ்டாலின், புத்தாண்டு பிறந்து நான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இது. அண்ணா, கருணாநிதி வழியில், ஈ.வே.ராவின் கனவை நினைவாக்கும் விதமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப்பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை உள்ளிட்ட திட்டங்களை உதாரணமாக சொல்லலாம். பெண்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதன் அடுத்த கட்டமாக, பெண்கள் உயர்கல்வி உறுதி செய்யும் விதமான திட்டங்களை உறுதி செய்து வருகிறோம்.

விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. பெண்கள், அதிகாரம், உலக அறிவை பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகமே உயர்ந்து நிற்கும். பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் திட்டத்தை தொடங்கி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சி பணிகளை கொடுத்து வருகிறோம் பெரியார் என்ன கனவு கண்டிருந்தாரோ, எதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அந்த எண்ணங்களை எல்லாம் நிறைவேற்றும் வகையில் பல திட்டங்களை தீட்டி வருகிறோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து