முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானப்படை தினம்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      இந்தியா
Modi-Rahul 2024-04-10

Source: provided

புதுடெல்லி : உலகளவில் திறன் வாய்ந்த விமானப்படை அமையப் பெற்ற நாடுகளில் நம் பாரத தேசமும் ஒன்றாக திகழ்கிறது. விமானப்படை வீரர்களைப் போற்றி கௌரவிக்கும் விதமாக அக்டோபர் 8-ம் தேதி விமானப்படை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று விமான படை தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பிரதமர்  மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

துணிச்சல் மிகுந்த நம் வீரர்களுக்கு விமானப்படை நாள் வாழ்த்துகள். வீரத்துக்கும் தொழில்முறை நடவடிக்கைகளுக்கும் சான்றாக நமது விமானப்படை விளங்குகிறது. நம் நாட்டை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு அளப்பரியது எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். 

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையின் துணிச்சலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மரியாதையுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 

உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் வானத்தைப் பாதுகாப்பாகவும், எங்கள் உற்சாகத்தையும் உயர்வாக வைத்திருக்கிறது. உங்களது தன்னலமற்ற சேவைக்கும், தியாகத்திற்கும் நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம், ஜெய்ஹிந்த். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து