முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான டி-20 தொடரை வெல்லுமா இந்தியா? - இன்று 2-வது டி-20 போட்டி

செவ்வாய்க்கிழமை, 8 அக்டோபர் 2024      விளையாட்டு
India-Bangladesh 2024-03-27

Source: provided

புதுடெல்லி : இந்தியா - வங்காளதேசம் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் ( 9-ந் தேதி) நடக்கிறது. இதில் வெற்றிப்பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்று ரசிகர்களிடம் எதிர்நோக்கியுள்ளனர்.

சுற்றுப்பயணம்... 

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் 280 ரன் வித்தியாசத்தில், கான்பூரில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் குவாலியரில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

மிகுந்த நம்பிக்கை...

இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று (9-ம் தேதி) நடக்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் இருக்கிறது. முதல் போட்டியில் எளிதில் வெற்றி பெற்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம்பலத்துடன் திகழ்கிறது. குவாலியர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கிலும், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

மாற்றம் இல்லை...

இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது. 11 பேர் கொண்ட அணியில் தமிழகத்தை சேர்ந்த 2 வீரர்களுக்கு (வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர்) வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதே நிலை இன்று தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெற்றி நெருக்கடி...

வங்கதேச அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதில் தோற்றால் தொடரை இழந்துவிடும். ஏற்கனவே அந்த அணி டெஸ்ட் தொடரை இழந்து இருந்தது. இதனால் வெற்றி பெற வேண்டிய கட்டாயமான இந்தப் போட்டியில் வங்கதேச வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள். இரு அணிகளும் இன்று மோதுவது 16-வது டி20 ஆட்டமாகும். இதுவரை நடைபெற்ற 15 போட்டியில் இந்தியா 14-ல், வங்கதேசம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமாவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து