முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு நாங்கள் தாரை வார்க்கவில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      தமிழகம்
Anbil 2

சென்னை, 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:- அரசுப் பள்ளிகளை தாரை வார்க்கிறோம் என்று பரவும் தகவல் தவறானது. அரசுப் பள்ளிகள் எங்கள் பிள்ளைகள்; அதை யாரும் தத்து கொடுக்கவில்லை. தவறுதலாக புரிந்து கொண்டு தாரை வார்ப்பு என விமர்சனங்கள் செய்கின்றனர். செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.

அரசுப் பள்ளி விவகாரத்தில் எனது தரப்பு விளக்கங்களை கேட்காமல், தேவையில்லாத பிரச்சினைகளை கிளப்பி, அவசர அவசரமாக கண்டனம் தெரிவிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன். சிஎஸ்ஆர் நிதி மூலம் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன்வந்தன. அரசுப் பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

கல்வி நிதி விவகாரத்தில் மத்திய அரசு நிதி கொடுக்காமல் கழுத்தை நெரிக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டால்தான் நிதி தருவோம் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். எங்கள் கொள்கைகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி விடுங்கள்; எங்கள் பிள்ளைகளை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து