முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2024      தமிழகம்
Clinder 2024-10-12

Source: provided

சென்னை : சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை பூந்தமல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். அவர்கள் நேற்று மதியம் உணவு தயாரிப்பதற்காக சிலிண்டரை ஆன் செய்தபோது அதிலிருந்து கசிவு ஏற்பட்டு தீ பரவியது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர். இந்த நிலையில், எதிர் வீட்டில் வசிக்கக்கூடிய பிரஜன், குமார், சரஸ்வதி ஆகியோர் என்னவென்று பார்த்து கொண்டிருந்தபோது திடீரென சிலிண்டர் வெடித்தது.

இதில் அந்த பகுதியில் இருந்த வீட்டின் ஒரு பகுதி இடித்து விழுந்தது. இந்த விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டர் வெடித்து சிதறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து