முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சை பெரியகோயில் 1039-வது சதய விழா பந்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      ஆன்மிகம்
Tanjore 2024-11-01

தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா நேற்று நடந்தது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 1039 ஆவது சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.

முன்னதாக பந்தக்காலிற்கு சந்தனம், தயிர், பால், திரவிய பொடி உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.

விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், வெற்றி தமிழர் பேரவை ரா. செழியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து