முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேடையில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      சினிமா
Sivakarthikeyan 2024-11-05

Source: provided

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில்  கடந்த அக்டோபர் 31 ல் வெளியாகி இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமரன் படம் திகழ்கிறது.

120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இப்படம் 150 கோடி வசூல் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், ஒரு படத்தின் வசூல் எனக்கு முக்கியம்தான். ஏனென்றால் அந்த படத்தில் தயாரிப்பாளர் பணம் போட்டிருக்கிறார்.

அந்த பணம் அவருக்கு திரும்பி கிடைத்தால் தான் இந்த மாதிரி இன்னும் பெரிய படங்கள் வெளியாவதற்கு வாய்ப்பு உருவாகும். நிறைய நாடுகளுக்கு நிறைய மக்களுக்கு நம் தமிழ் சினிமாவை கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் என் ஆசை. அதற்காக மட்டும்தான் இந்த வசூல் முக்கியம்னு நான் பார்க்கிறேன். கமர்ஷியல் வெற்றி ரொம்ப முக்கியம்.

இந்த மாதிரி இன்னும் நிறைய படம் வரும். நான் நிச்சயமாக அந்த மாதிரியான படங்கள் செய்ய முயற்சி செய்வேன். தமிழ் மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என்றார். தனது அப்பாவுக்கும் அமரன் பட நிஜ நாயகன் மேஜர் முகுந்துக்கும் உள்ள ஒற்றுமைகளைப்பற்றி பேசும் போது சிவா கண் கலங்கி விட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து