எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எவராலும் முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மராட்டிய சட்டசபை தேர்தல் வருகிற 20-ந்தேதி நடக்கிறது. ஆளும் மகாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணிகளை சேர்ந்த மாநில தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மும்பையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தநிலையில் பிரதமர் மோடி மராட்டியத்தில் துலே மாவட்டத்தில் தனது முதல் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதாவது., ஒரு ஜாதியை இன்னொரு ஜாதியை எதிர்த்துப் போராட வைக்கும் ஆபத்தான ஆட்டத்தை காங்கிரஸ் ஆடுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முன்னேறுவதை காங்கிரசால் ஏற்க முடியாது என்பதால் இந்த ஆட்டம் ஆடப்படுகிறது. இவை அனைத்தும் ஒற்றுமையாக இருந்தால் காங்கிரசின் அரசியல் முடிந்து விடும்.நேரு காலத்தில் இருந்தே காங்கிரசும் அவரது குடும்பத்தினரும் இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்தனர்.
ராஜீவ் காந்தி கூட ஓபிசி இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்த்தார். எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசி சமூகங்கள் அதிகாரம் பெற்றால், அவர்களின் அரசியல் கடையின் ஷட்டர் இழுத்து மூடப்படும் என்பது அவர்களுக்கு தெரியும். ராஜீவ் காந்திக்குப் பிறகு, இப்போது இந்தக் குடும்பத்தின் நான்காம் தலைமுறை பட்டத்து இளவரசரும் அதே ஆபத்தான மனப்பான்மையுடன் செயல்படுகிறார். எஸ்சி/எஸ்டி சமுதாயத்தின் ஒற்றுமையை உடைப்பதும், ஓபிசி சமுதாயத்தின் ஒற்றுமையை சிதைப்பதும்தான் காங்கிரசின் ஒரே நோக்கம்.
ஓபிசி மற்றும் எஸ்டி சமூகங்களை பல்வேறு சாதிகளாக பிரிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதனால்தான் சொல்கிறேன் - உங்களிடம் ஒற்றுமை இருப்பதால் நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். நாம் ஒற்றுமையாக இருந்து காங்கிரசின் ஆபத்தான விளையாட்டை முறியடித்து வளர்ச்சிப் பாதையில் முன்னேற வேண்டும். ஜம்மு-காஷ்மீரில் இருந்து அரசியலமைப்பை அகற்ற காங்கிரஸ் தலைமையிலான இந்திய அணி விரும்புகிறது.
சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எந்த சக்தியாலும் முடியாது. ஜம்மு-காஷ்மீரில் அம்பேத்கரின் அரசியலமைப்பு மட்டுமே பின்பற்றப்படும். 370வது சட்டப்பிரிவை திரும்பப் பெறுவது குறித்து ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எப்படி தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பதையும், பாஜக எம்எல்ஏக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் தூக்கி எறியப்பட்டதையும் நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். இதை நாடும், மராட்டிய மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். நான் உங்களிடம் ஏதாவது கேட்டல் நீங்கள் எனக்கு தாராளமாக ஆசீர்வாதங்களை வழங்கி உள்ளீர்கள். 2014 சட்டமன்றத் தேர்தலின் போது இந்த துலே நகருக்கு வந்து, மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைத்தேன். மராட்டியத்தில் 15 ஆண்டுகால அரசியல் சுழற்சியை முறியடித்து பாஜகவை வரலாறு காணாத வெற்றிக்கு அழைத்துச் சென்றீர்கள்.
இன்று நான் மீண்டும் இங்கு துலே வந்துள்ளேன். மராட்டியத்தில் துலேயில் இருந்தே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளேன். இந்த கூட்டம், இந்த உற்சாகம் உண்மையில் அதிக நம்பிக்கையை அளிக்கிறது. பாஜக கூட்டணியின் ஒவ்வொரு வேட்பாளருக்கும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். கடந்த 2.5 ஆண்டுகளில் மராட்டிய வளர்ச்சி அடைந்துள்ள வேகத்தை நிறுத்த அனுமதிக்க மாட்டோம் என்று நான் உறுதியளிக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் மராட்டியத்தின் முன்னேற்றத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம். மராட்டியத்திற்கு தேவையான நல்லாட்சியை பாஜக கூட்டணி அரசால் மட்டுமே வழங்க முடியும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.
காங்கிரஸ் கூட்டணி சக்கரம் மற்றும் பிரேக் இல்லாத வாகனம் போன்றது. அங்குள்ள அனைவரும் ஓட்டுநர் இருக்கைக்கு அமர சண்டை போடுகிறார்கள். நாங்கள் மக்களை கடவுளின் மறுவடிவமாக கருதுகிறோம். ஆனால் சிலர் மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்காக அரசியலில் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியின் 2.5 வருட மோசடி அரசை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இவர்கள் முதலில் அரசை கொள்ளையடித்து விட்டு பிறகு மக்களிடம் கொள்ளை அடித்தார்கள். அதன்பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2.5 ஆண்டுகளில் மராட்டியத்தில், தனது பெருமையையும் வளர்ச்சியின் நம்பிக்கையையும் மீட்டெடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-11-2024.
08 Nov 2024 -
பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களுக்கு அனுமதி
08 Nov 2024சென்னை, அய்யப்ப பக்தர்கள் வசதிக்காக பம்பை வரை தமிழக பஸ்களை இயக்க கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
கலைஞர் செம்மொழித் தமிழ் விருது: முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
08 Nov 2024சென்னை, 2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கி சிறப்பித்தார்.
-
வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் : எலான் மஸ்க் கணிப்பு
08 Nov 2024வாஷிங்டன் : வரவிருக்கும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு துறையின் தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்
08 Nov 2024சென்னை, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு ரூ.
-
பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக அறிவித்தது தமிழக அரசு
08 Nov 2024சென்னை : பாம்பு கடியை அறிவிக்கக்கூடிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பணமதிப்பிழப்பு நடவடிக்கை: 8 ஆண்டுகள் நிறைவடைந்தது
08 Nov 2024புதுடெல்லி : பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்தது.
-
சபரிமலையில் தரிசனத்துக்கான புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு
08 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகரில் நேரடி கள ஆய்வு
08 Nov 2024சென்னை : விருதுநகரில் இன்றும், நாளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வு மேற்கொள்கிறார்.
-
அத்வானிக்கு பிறந்த நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
08 Nov 2024புதுடெல்லி : பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக சூசன் வைல்ஸ் : டொனால்டு டிரம்ப் நியமித்தார்
08 Nov 2024வாஷிங்டன் : தன்னுடைய தேர்தல் பிரச்சார குழுவின் மானேஜராக திகழந்த சூசன் வைல்ஸ் என்ற பெண்மணியை வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக டிரம்ப் நியமித்துள்ளார்.
-
உலக வல்லரசு நாடுளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் : ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்
08 Nov 2024மாஸ்கோ : உலக வல்லரசுகளின் பட்டியலில் இந்தியா சேர்க்கப்பட வேண்டும் என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை, விடுதி கட்டிடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Nov 2024சென்னை : தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் 29 மாவட்டங்களில் ரூ.171.16 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறை மற்றும் விடுதி கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
08 Nov 2024திருவண்ணாமலை : தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
இன்று முதல் தீர்ப்பளிக்க முடியாது: பிரியாவிடை நிகழ்ச்சியில் டி.ஒய்.சந்திரசூட் உருக்கம்
08 Nov 2024புதுதில்லி : யாரையாவது காயப்படுத்தியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இன்று முதல் நான் தீர்ப்பளிக்க முடியாது, ஆனால் நிறைவாகவே உணர்கிறேன் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை
-
டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 246 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்
08 Nov 2024சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினா
-
வரும் ஜனவரி 1 முதல் சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை
08 Nov 2024பாரீஸ் : சுவிட்சர்லாந்தில் புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவானது ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
-
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு: அணிகலன் தயாரிக்கும் கற்கள் கண்டெடுப்பு
08 Nov 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணியின் போது அணிகலன் தயாரிக்க பயன்படும் கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
ஜன. 20-ல் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் : அதிபர் ஜோ பைடன் பேட்டி
08 Nov 2024வாஷிங்டன் : ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது : எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
08 Nov 2024மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உத
-
ஜம்மு-காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
08 Nov 2024ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா ரதம் வெள்ளோட்டம்: அரோகரா முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
08 Nov 2024திருவண்ணாமலை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகைத் தீபத் திருவிழாவை முன்னிட்டு ரூ.70 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட மகா ரதம் வெள்ளோட்டம் நேற்று வெற்றிகரமாக நடை
-
பாசனத்திற்காக மேட்டூா் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
08 Nov 2024மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
இஸ்லாமிய அமைப்பு ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் : கேரள முதல்வர் பினராய் விஜயன் தாக்கு
08 Nov 2024திருவனந்தபுரம் : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவுடன் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்
-
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்
08 Nov 2024சென்னை : கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து கங்குவா படம் வருகிற 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.