எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மா இல்லாததால் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையாடினார். தற்போது ரோகித் சர்மா அணிக்கு திரும்பி விட்டதால் 2-வது டெஸ்டில் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் லோகேஷ் ராகுல் பின்வரிசைக்கு தள்ளப்படுவார் இந்நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது, பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன். ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் போதும். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, களம் கண்டு அணிக்காக பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன். இந்திய அணிக்காக பல வரிசையில் விளையாடி இருக்கிறேன்.
தொடக்க காலங்களில் முதல் 20-25 பந்துகளை எதிர்கொள்வது தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல் மனரீதியாக சற்று சவாலாக இருந்தது. எப்போது அதிரடி காட்ட வேண்டும்?, எவ்வளவு நேரம் எச்சரிக்கையாக ஆட வேண்டும்? போன்ற விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும். ஆனால் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் பல இடங்களில் விளையாடி பழக்கப்பட்டு விட்டதால், எனது இன்னிங்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திட்டம் என்னிடம் இருக்கிறது. நான் தொடக்க வீரராக விளையாடினாலும் சரி, மிடில் வரிசையில் விளையாடினாலும் சரி, முதல் 30-40 பந்துகளை சமாளித்து விட்டால், அதன் பிறகு எளிதாக ஆட முடியும். அதில் எனது கவனத்தை செலுத்த முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஆடும் அணி (பிளேயிங் 11) அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 10 பேர் மாற்றமின்றி தொடருகின்றனர். ஒரே மாற்றமாக காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 விவரம் பின்வருமாறு., உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலந்து.
பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி: முகமது ரிஸ்வான் (கேப்டன் ), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஹாரிஸ் ரவுப், ஜஹந்த் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், உமைர் பின் யூசுப், சைம் அயூப், சல்மான் அலி அகாடி, சுஹீன் அலி ஆகா, மொகிம், தயப் தாஹிர் மற்றும் உஸ்மான் கான் .
ஆஸ்திரேலியா அபார வெற்றி
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஆஸ்திரேலிய வீராங்கனை மேகன் ஷட்டின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியில் ஹர்லீன் தியோல் (19 ரன்கள்), ஹர்மன்ப்ரீத் கவுர் (17 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (23 ரன்கள்) மற்றும் ரிச்சா கோஷ் (14 ரன்கள்) தவிர வேறு யாரும் இரட்டை இலக்கை தொடவில்லை.
வெறும் 34.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்தியா 100 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக மேகன் ஷட் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 101 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன லிட்ச்பீல்ட் மற்றும் ஜார்ஜியா வால் வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர். வெறும் 16.2 ஓவர்களிலேயே 102 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஜார்ஜியா வால் 46 ரன்களும், லொட்ச்பீல்ட் 35 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளும், பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-01-2025.
13 Jan 2025 -
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று
13 Jan 2025புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டா ப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
13 Jan 2025சென்னை : சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முரசு கொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
உ.பி. மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்
13 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
-
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
13 Jan 2025சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பிரட்டனில் 166 மி. ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
13 Jan 2025லண்டன் : பிரிட்டனில் சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான 200 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
வண்டலூர் பூங்காவில் பொங்கல் சிறப்பு ஏற்பாடுகள் புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு தடை
13 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸி., தென் ஆப்பிரிக்கா, ஆப்கன் அணிகள் அறிவிப்பு
13 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை
13 Jan 2025ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
-
100 நாள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2025சென்னை : தமிழகத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
-
தொடர் கனமழை - நிலச்சரிவு: பிரேசிலில் 10 பேர் பலி
13 Jan 2025பிரேசிலியா : பிரேசிலில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
காட்டுத் தீயிலிருந்து வீடுகளை பாதுகாக்க மணிக்கு ரூ.1.7 லட்சம் செலவு
13 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.7 லட்சம் வரை செலவிடுவதாக தகவல
-
கேந்திரிய வித்யாலயாவில் தேர்வு தேதிகள் மாற்றம்
13 Jan 2025சென்னை : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.