முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.கில் பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொலை பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      உலகம்
Pakistan 2024-12-06

Source: provided

லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சவுத் வசீரிஸ்தான் மற்றும் லக்கி மார்வாத் மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை பற்றிய ரகசிய தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படை தனித்தனியாக நடவடிக்கை மேற்கொண்டனர்.

சவுத் வசீரிஸ்தானுக்கு உட்பட்ட சாராரோகா பகுதியில் நடந்த இந்த சோதனையில் கார்ஜி தலைவரான கான் முகமது என்ற கோரியாய் என்பவர் உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  

லக்கி மார்வாத் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்கள் தவிர, 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கான் முகமது என்பவரும் ஒருவர் ஆவார்.  இவரை பிடித்து தருபவர்களுக்கு ரூ.10 லட்சம் அளிக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. 

பாகிஸ்தானில் கடந்த நவம்பரில் 68 ராணுவ அதிகாரிகள் மற்றும் 127 பயங்கரவாதிகள் உள்ளிட்ட 245 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.  நாட்டில் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டு, அமைதி உறுதி செய்யப்படுவதற்கான பணியை பாதுகாப்பு படையினர் உறுதியான முடிவுடன் மேற்கொண்டு வருகின்றனர் என ராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து