எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் டெல்லி நோக்கி பேரணி: விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு
புது டெல்லி, டெல்லி நோக்கி பேரணியாக சென்ற பஞ்சாப் விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் 6 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை உறுதி செய்யவும், மின்சார மானியம் வழங்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகளுக்கு ஓய்வூதியம் வழங்கவும், லக்கிம்பூரில் கடந்த ஆண்டு விவசாயிகள் மீது நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு நியாயம் வழங்க வலியுறுத்தியும் ஜத்தா பகுதி பஞ்சாப் விவசாயிகள் பாராளுமன்றம் நோக்கி நேற்று மதியம் பேரணி சென்றனர்.
இதனால் டெல்லியில் கடுமையான நெரிசல் ஏற்படும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கருதி போலீசார் விவசாயிகளை டெல்லி எல்லையிலேயே தடுத்து நிறுத்த திட்டமிட்டனர். டெல்லியில் முக்கிய இடங்களில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். விவசாயிகள் பேரணியை தடுக்க அம்பாலா சாலையில் போலீசார் கான்கிரீட் தடுப்புகள் அமைத்தனர். விவசாயிகள் திரண்டு வருவதற்கு போலீசார் தடை விதித்து இருந்தனர்.
அரியானா மாவட்ட போலீசாரும் இப்பேரணிக்கு அனுமதி வழங்காத நிலையில் விவசாயிகள் பேரணி செல்ல இருந்ததால் அசம்பாவிதம் நிகழ்வதை தடுக்க ஹரியானா எல்லை பகுதியான ஷம்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர். அப்போது, டெல்லி எல்லையில் ஷம்பு பகுதியில் விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர். காவலர்களின் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், விவசாயிகளின் போராட்டத்தை டிரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் பகீரத் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக நிறுத்தம்
போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சு காரணமாக 6 விவசாயிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் பந்தேர் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சம்யூக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இணைய சேவை நிறுத்தம்
விவசாயிகள் பேரணி எதிரொலியாக அரியானாவின் அம்பாலா மாவட்டத்தின் 11 கிராமங்களில் செல்போன் இணையசேவை, மொத்தமாக குறுஞ்செய்தி அனுப்புவது ஆகியவற்றை வரும் 9ம் தேதி இரவு 11.59 மணி வரை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது. விவசாயிகள் பேரணியால் பதற்றம், கிளர்ச்சி மற்றும் பொது அமைதிக்கு இடையூறு என்ற அச்சம் காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: லாஸ் ஏஞ்சல்ஸில் 15 சதவீதம் தீ மட்டுமே கட்டுக்குள் வந்துள்ளது
13 Jan 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 15 சதவீதம் தீ மட்டுமே
-
சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சேவை புரிந்தோருக்கு தமிழக கவர்னர் விருதுகள் அறிவிப்பு
13 Jan 2025சென்னை: சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் சேவை புரிந்தோருக்கான விருதுகளை கவர்னர் மாளிகை அறிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
13 Jan 2025சென்னை : சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா கலைநிகழ்ச்சிகளை முரசு கொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து
13 Jan 2025சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள
-
சனாதன தர்மத்தை மீட்டவர்: வள்ளலாருககு கவர்னர் புகழாரம்
13 Jan 2025கிருஷ்ணகிரி: சனாதன தர்மத்தை மீட்டவர் வள்ளலார் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 கேரள மாவட்டங்களுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு
13 Jan 2025திருவனந்தபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1,056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2025சென்னை : தமிழகத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 மாதத்திற்கான ரூ.1056 கோடி ஊதிய நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் 6.40 லட்சம் பேர் பயணம்
13 Jan 2025சென்னை : கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
13 Jan 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து விற்பனையானது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல்
13 Jan 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு இதுவரை 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500: டெல்லியில் காங். தேர்தல் வாக்குறுதி
13 Jan 2025புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.8,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  
-
திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்டரில் தீ : பக்தர்கள் கடும் அதிர்ச்சி
13 Jan 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
பிரட்டனில் 166 மி. ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிப்பு
13 Jan 2025லண்டன் : பிரிட்டனில் சுமார் 166 மில்லியன் ஆண்டுகள் பழமையான 200 டைனோசர் கால் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
உ.பி. மகா கும்பமேளா கோலாகல தொடக்கம்: லட்சக்கணக்கானோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்
13 Jan 2025பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர்.
-
காட்டுத் தீயிலிருந்து வீடுகளை பாதுகாக்க மணிக்கு ரூ.1.7 லட்சம் செலவு
13 Jan 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் காட்டுத்தீக்கு இரையாகும் வீடுகளைப் பாதுகாக்க, லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.7 லட்சம் வரை செலவிடுவதாக தகவல
-
வண்டலூர் பூங்காவில் பொங்கல் சிறப்பு ஏற்பாடுகள் புகையிலை, மதுபானம் போன்ற பொருட்களுக்கு தடை
13 Jan 2025சென்னை : பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
13 Jan 2025சென்னை : பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று
13 Jan 2025புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தைக்கு ஹியூமன் மெட்டா ப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருவதாக
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
13 Jan 2025மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து ரூ.86. 61 காசுகளுக்கு வணிகமானது.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடர்: ஆஸி., தென் ஆப்பிரிக்கா, ஆப்கன் அணிகள் அறிவிப்பு
13 Jan 2025மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
-
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
13 Jan 2025சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும
-
ராஜஸ்தானில் கடும் குளிர்: பள்ளிகளுக்கு விடுமுறை
13 Jan 2025ஜெய்ப்பூர் : கடும் குளிர் காரணமாக ஜெய்ப்பூர் உள்பட 25 மாவட்டங்களில் 1 - 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் உற்பத்தி அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்
13 Jan 2025சென்னை: நாட்டின் 40 சதவீத மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தான் உற்பத்தியாகிறது என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார் .
-
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளர், பொருளாளர்
13 Jan 2025மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார்