முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெதர்லாந்தில் வெடித்து சிதறிய குடியிருப்பு கட்டிடம்: 5 பேர் பலி : பிரதமர் டிக் ஸ்கூப் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      உலகம்
Netherland 2024-12-08

Source: provided

தி ஹேக் : நெதர்லாந்தில் திடீரென குடியிருப்பு கட்டிடம் வெடித்து சிதறிய விபத்தில் 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் டிக் ஸ்கூப் மற்றும் அரச குடும்பம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் தி ஹேக் நகரின் மரியாஹோவ் பகுதியில் நேற்று முன்தினம் காலையில் வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பதறியடித்து வெளியில் வந்து பார்த்தபோது ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. 

அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். இதையடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசர சேவை மீட்புக் குழுவினர் விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

நேற்று மதிய நிலவரப்படி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.

இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனர். 2 நாட்கள் ஆன நிலையில் அவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு குறைவு என்று நகர மேயர் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது விபத்தா அல்லது வெடிகுண்டு தாக்குதலா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. சம்பவம் நடந்த போது அந்த பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்ற கார் மீது காவல்துறைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படுகிறது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் டிக் ஸ்கூப் மற்றும் அரச குடும்பம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து