முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடிலெய்டு தோல்வி: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 3-வது இடத்திற்கு சரிந்தது : ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 8 டிசம்பர் 2024      விளையாட்டு
Australia-1 2024-06-21

Source: provided

அடிலெய்டு : அடிலெய்டு டெஸ்ட்டில் தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு இந்திய அணி சரிந்தது. 60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

சுற்றுப்பயணம்... 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) அடிலெய்டில் நேற்று முன்தினம் தொடங்கியது.இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 44.1 ஓவர்களில் 180 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

2-வது இன்னிங்சை... 

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 87.3 ஓவர்களில் 337 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா முகமது சிராஜ் தலா 4 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 128 ரன்கள் அடித்திருந்தது.

175 ரன்களில் அவுட்... 

இந்நிலையில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ரிஷப் பண்டின் விக்கெட்டை பறிகொடுத்தது. பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 2-வது இன்னிங்சில் 175 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா வெற்றி பெற வெறும் 19 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

ஆஸி. முதலிடத்தில்...

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 3.2 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.  இந்த வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது . 60.71 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்தில உள்ளது. 57.29 புள்ளிகளுடன் இந்திய அணி 3வது இடத்தில உள்ளது 

சிறப்பாக விளையாடவில்லை: ரோகித்

போட்டி முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "இது எங்களுக்கு ஏமாற்றமான வாரம். நாங்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நாங்கள் அதைச் செய்யத் தவறிவிட்டோம். அது எங்களுக்கு பின்னடைவாக அமைந்தது.இளஞ்சிவப்பு பந்து சவாலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா எங்களை விட சிறப்பாக விளையாடியது. தற்போது நாங்கள் அடுத்த போட்டியை எதிர் நோக்கியுள்ளோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து