முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மாநிலங்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தது தி.மு.க.

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      இந்தியா
Parliment-2025-03-10

புதுடெல்லி, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மாநிலங்களவையில் தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டால் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளை நாம் இழக்க நேரிடும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி தமிழக அரசு தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் பகுதி நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ந்தேதியுடன் நிறைவடையும். இந்த 2-ம் பகுதியில், திரிபுவன் ஷாகாரி பல்கலைக்கழக மசோதா 2025-ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிலையில், 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் பாதிக்கும் என மாநிலங்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு  விவாதம் நடத்த கோரி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து