முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தி.மு.க. வினர் போராட்டம்

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      தமிழகம்
Dharmendra Pradhan 2023 06 21

சென்னை, தி.மு.க.  எம்.பி.க்கள் பற்றி தவறாகப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதனுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு  நேற்று (மார்ச் 10) தொடங்கியது.  கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தி.மு.க.எம்.பி.க்கள் பேசினர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று தி.மு.க.  எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் பேசினர்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய சரியான புரிதல் தமிழ்நாட்டிற்கு இல்லை, பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக தமிழ்நாடு கூறிய நிலையில் திடீரென நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழ்நாடு முன்வந்தபோது சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிக்கிறது' என்று பேசினார்.

அப்போது பேசுகையில் தி.மு.க.  எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார். இதற்கு தி.மு.க.  எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக தி.மு.க.  எம்.பி. கனிமொழி கூறினார். இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை, தமிழக எம்.பி.க்களை அவமரியாதையாகப் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னையில் கொருக்குப்பேட்டை பகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல திருச்சி, சேலம், கோவையிலும் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து