முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி மறுவரையறை கூட்டம்: கேரள முதல்வருக்கு தி.மு.க. நேரில் அழைப்பு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      இந்தியா
Kerala-CM--2025-03-14

திருவனந்தபுரம், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தி.மு.க.  சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அமைச்சர் பி.டி. தியாகராஜன், தி.மு.க.  எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர், முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை வழங்கினர். மேலும், கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து, இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பி.டி.தியாகராஜன்,   இந்த தொகுதி மறுவரையறை என்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கும், மாநிலங்களின் பிரதிநிதித்துவ உரிமைக்கும் எதிரான மறுக்க முடியாத தாக்குதலாகும். இந்த விஷயத்தில் நமது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் கூட்டுப் போராட்டத்திற்கான தனது முழுமையான ஆதரவை கேரள முதல்வர்  உறுதி செய்தார்" என குறிப்பிட்டுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கேரள முதல்வர் பினராயி விஜயனை, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் சார்பில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.பி.தியாகராஜனும், நானும் சந்தித்து, அழைப்பு விடுத்தோம். இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மாஸ்டர் கோவிந்தனையும் சந்தித்து அழைப்பு விடுத்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து