முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Appavu--1

சென்னை, ஏப்ரல் 30-ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. சட்டசபையில் நேற்று கூடிய முதல் நாள் கூட்டத்தில் 2025-2026-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பட்ஜெட் உரையை அமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.32 மணிக்கு தொடங்கி மதியம் 12.10 மணிக்கு நிறைவு செய்தார். சுமார் 2 மணி நேரம் 38 நிமிடம் உரையை வாசித்தார்.

அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வண்ணம் ஒரு நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்றைய தினத்தை தவிர அனைத்து நாட்களிலும் கேளிவி நேரம் நடைபெறும். வருகிற திங்கட்கிழமை முதல் 5 நாட்களுக்கு பட்ஜெட் மீதான பொதுவிவாதமும், பதிலுரையும் நடைபெறும்.

அதன் தொடர்ச்சியாக 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 30-ம் தேதி வரை 24 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும். அப்போது மானிய கோரிக்கையின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டி, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்; இது ஒன்னும் புதுசு கிடையாது, அ.தி.மு.க. தீர்மானத்திற்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளோம். அது சட்டசபையில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து