முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 இடங்களில் அகழ்வாராய்ச்சி: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Vembakkottai 2024-06-30

 சென்னை, தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய 8 இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (மார்ச் 14) காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார். 

பண்பாடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு அவர் பேசியது: “தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை மாவட்டம்-கீழடி. தூத்துக்குடி மாவட்டம்-பட்டணமருதூர். தென்காசி மாவட்டம்-கரிவலம்வந்தநல்லூர், நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம், கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை, கள்ளக்குறிச்சி மாவட்டம் -ஆதிச்சனூர், கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளளூர் மற்றும் சேலம் மாவட்டம்-தெலுங்கனூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும். பழந்தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடும் பயணம் அண்டை மாநிலங்களில் உள்ள பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திரா), மஸ்கி (கர்நாடகா) ஆகிய பகுதிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.

 மேலும், பல்வேறு ஆழ்கடல் அகழாய்வுகளை தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆண்டு புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர்களின் ஆலோசனையுடனும், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் துணையோடும், காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை விரிவான ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

 கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி, ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும். சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நிறைவையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்படும்.

சிற்ப அமைதி, உடல் நெகிழ் தோற்றத்தன்மை, எழில்மிகு முத்திரைகள் கொண்ட சிற்பத் திருமேனிகளை வெளிநாட்டவரும் கண்டு வியக்கும் வகையில் மரபுசார் கட்டடக்கலை வடிவமைப்புடன் கூடிய காட்சி அரங்கம் ஒன்று 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்படும்,” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து